டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை


டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை
x
தினத்தந்தி 27 Jun 2021 2:33 AM IST (Updated: 27 Jun 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் காட்டெருமை இறந்து கிடந்தது.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் பகுதியில் குன்னாங்கரடு என்ற இடத்தில் உள்ள சிறிய பள்ளத்தில் நேற்று காலை காட்டெருமை படுகாயங்களுடன் விழுந்து கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் பள்ளத்தில் விழுந்த காட்டெருமையை கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த காட்டெருமை ஏற்கனவே உடலில் காயம்பட்ட நிலையில் உடல் நலக்குறைவுடன் இருந்ததால் மீட்கும் போதே இறந்து விட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகன் வரவழைக்கப்பட்டார். அவர் இறந்து போன காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். 
இதுகுறித்து கால்நடை டாக்டர் அசோகன் கூறும்போது, ‘இறந்துபோன காட்டெருமைக்கு 15 வயது இருக்கும் என்றும், மற்ற காட்டெருமைகளுடன் சண்டையிட்டதால் உடலில் காயம் ஏற்பட்டு இருக்கும் என்றும், இதனால் கால் தவறி பள்ளத்தில் விழுந்து காட்டெருமை இறந்து போனது’ என்றார்.

Next Story