கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சட்டசபையில் கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று பேசிய ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வை கண்டித்தும், அந்த பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க கோரி கோவில்பட்டி தேவர் சிலை முன்பு நேற்று மாலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி:

ஆர்ப்பாட்டத் திற்கு நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி நகர பொது செயலாளர் சுதாகரன், நகர செயலாளர் வெங்கடேஷின், அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் லட்சுமண குமார், நகர பொறுப்பாளர் மாரிமுத்து, ரவிகுமார், ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் திடல், ரெயில் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணியின் சார்பில் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை தலைவர் கசமுத்து ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை கோட்ட இந்து முன்னணி செயலாளர் சக்திவேலன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் இராமசாமி, பொது செயலாளர் ஜெகன், ஆறுமுகநேரி நகர தலைவர் வெங்கடேசன், திருச்செந்தூர் நகர பொருளாளர் ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story