கொரோனாவுக்கு 2 பேர் பலி


கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 Jun 2021 10:29 PM IST (Updated: 27 Jun 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர். மேலும் 69 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 42,209  பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 327 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 41,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது.

69 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,278 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Next Story