விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை


விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2021 10:42 PM IST (Updated: 27 Jun 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவுவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில், பஸ் நிறுத்தம், விக்கிரவாண்டி வடக்கு, தெற்கு புறவழி சாலை முனைகள், பாப்பனப்பட்டு, வி.சாலை, சித்தணி, பேரணி கூட்ரோடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி அதிகரித்து வருகிறது. இந்த இடங்களை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் பைபாஸ் சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ் டைப் பேரி கர்டுகளை அமைத்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவடிவேல் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story