சாலை மறியல்; 150 பேர் கைது
சாலை மறியல்; 150 பேர் கைது
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அமைந்துள்ளது. சந்தனக்கூடு திருவிழாவின்போது தர்கா வளாகத்தில் ஒரு மரத்தில் கொடிகட்டப்படும். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடி தொடர்பாக கலெக்டருக்கு புகார் எழுந்தது. இதனையடுத்து திருமங்கலம் கோட்டாசியர் மலைக்கு சென்று ஆய்வு செய்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் மலை மற்றும் மலையடிவாரப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் கொடி அகற்றப்பட்டதாகவும், அதனை மீண்டும் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்ததில் சாலையில்அமர்ந்து இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தர்காவில் உள்ள கொடியை அகற்றியதைக் கண்டித்து, முஸ்லிம்கள் கோரிப்பாளையம் பகுதியில் சாலை மறியல் செய்தனர்.
Related Tags :
Next Story