ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 56 இடங்களிலும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 66 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போடும் மையங்களில் நள்ளிரவு முதல் மக்கள் குவியத் தொடங்கினர். இதனால் டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. எனினும் சில மையங்களில் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
110 மையங்கள்
இந்தநிலையில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், அவர்கள் சிரமமின்றி தடுப்பூசி போடும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இதைப்போல் புறநகர் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் மையம் அதிகரிக்கப்பட்டு தினமும் 110 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டது. தடுப்பூசிகள் வருவதை பொறுத்து இன்று (திங்கட்கிழமை) முதல் வழக்கம்போல் மையங்களில் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story