பவானி அருகே வாகன சோதனை: வேனில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது


பவானி அருகே வாகன சோதனை: வேனில் மதுபாட்டில்கள் கடத்திய  2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 28 Jun 2021 3:50 AM IST (Updated: 28 Jun 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே வேனில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பவானி
பவானி அருகே வேனில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. இதனால் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து மதுவை கடத்தி கொண்டு வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், பவானி அருகே உள்ள லட்சுமி நகர் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு  சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 171 மதுபாட்டில்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து வேனில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கூலிஸ் லைன் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகன் முத்துக்குமார் (வயது 32) என்பதும், அவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த சி7 அவின்யூ காலனியைச் சார்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் தீபக் (31) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 171 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story