தாளவாடியில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை துரத்திய ஒற்றை யானை
தாளவாடியில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை ஒற்றை யானை துரத்தியது.
தாளவாடி
தாளவாடியில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை ஒற்றை யானை துரத்தியது.
உணவு-தண்ணீர் தேடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக தாளவாடி மலைப்பகுதியில் வாகனபோக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வன பகுதியை விட்டு வெளியேறி சாலையோரமாக உலா வருகின்றன.
துரத்தியது
இந்தநிலையில் தாளவாடியில் இருந்து தலமலை நோக்கி விவசாயி ஒருவர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தலமலையை அடுத்த சிக்கள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரமாக புதர்மறைவில் நின்றிருந்த ஒற்றை யானை திடீரென அவரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக சென்று உயிர் தப்பினார். இந்த காட்சியை பின்னால் சென்ற லாரி டிரைவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லவேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பி செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளார்கள்.
Related Tags :
Next Story