கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு


கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Jun 2021 10:07 PM IST (Updated: 28 Jun 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு பெண்ணை தாக்கியது தொடர்பாக கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு

திருமங்கலம்,ஜூன்.
திருமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி புஷ்பராணி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். செல்லப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் புஷ்பராணியிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செல்லப்பாண்டி தனது மனைவியிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புஷ்பராணி திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செல்லப்பாண்டி, அவரது தாயார் தமிழ்மணி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story