சுருக்குமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது உதவி கலெக்டர் பேச்சு
சுருக்குமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது உதவி கலெக்டர் பேச்சு.
திருவெண்காடு,
சுருக்குமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று உதவி கலெக்டர் நாராயணன் கூறினார்.
பஞ்சாயத்தார்கள் பொறுப்பாளர்கள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடி தொழில் செய்யக்கூடாது என மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் பூம்புகார் மீனவர் கிராமத்தில் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் நேற்று கிராம பஞ்சாயத்தார்கள் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிப்பதால், மீனவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும், இதன் காரணமாக கடல் வளம் பாதிக்காது எனவும் பல்வேறு ஆதாரங்களை மேற்கோள்காட்டி மீனவ கிராம பொறுப்பாளர்கள் விளக்கி பேசினர்.
சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது
அதனை தொடாந்்து உதவி கலெக்டர் நாராயணன் கூறுகையில்,
அரசு வழிகாட்டுதலின்படி சுருக்குமடி வலைகளை கொண்டு மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதனை ஏற்று மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்றார். கூட்டத்தில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், மீன்வளத்துறை அதிகாரி பாலசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகரத்தினம், ஜெயந்தி, சீர்காழி தாசில்தார் சண்முகம், வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரவேல், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story