கடலூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு


கடலூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 28 Jun 2021 10:57 PM IST (Updated: 28 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி நடந்துள்ளதாக போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.

கடலூர், 

கடலூர் அருகே உள்ள வாழப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பில்லாலி, காராமணிக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

வரக்கால்பட்டை சேர்ந்த தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனர். இதனால் நாங்கள் சுமார் 500 பேர் வரையில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஏலச்சீட்டு கட்டி வந்தோம். 

இந்நிலையில் சீட்டு தவணை முடிந்தவர்களுக்கு, பணம் வழங்காமல் காலம்தாழ்த்தி வருகின்றனர். மேலும் சீட்டு நடத்துவதற்கு உடந்தையாக இருந்த தம்பதியரின் உறவினர்கள் கடந்த 3 மாதமாக தலைமறைவாகி விட்டனர். 

அவர்கள் எங்களிடம் சுமார் ரூ.3 கோடி பணம் மோசடி செய்துள்ளனர். எனவே ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story