7 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


7 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:18 AM IST (Updated: 29 Jun 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் 7 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மதுரை,ஜூன்.
சட்டமன்ற தேர்தலையையொட்டி இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் அதே ஊரில் பணிபுரிய விண்ணப்பித்துள்ளதை தொடர்ந்து பலர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து மதுரை நகருக்கு வெளியூரில் இருந்து வந்த மற்றும் உள்ளூரில் பணிபுரியும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் 7 பேரை இடமாற்றம் செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தங்கமணி-மதுரை தெப்பக்குளத்துக்கும், செந்தில்குமார் ஆயுதப்படைக்கும், கணேஷ்ராம் (திருப்பரங்குன்றம்) - தெற்குவாசல், நந்தகுமார் (தெப்பக்குளம்) - மதுரை தெற்கு, சுரேஷ் (தெற்குவாசல்) - தல்லாகுளம், மதுரை தெற்கு பால்தாய்- மதுரை ஐகோர்ட் பணி, சோமசுந்தரம்- திருப்பரங்குன்றம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Next Story