வைகை ஆற்றில் வாலிபர் பிணமாக மீட்பு


வைகை ஆற்றில் வாலிபர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 1:27 AM IST (Updated: 29 Jun 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் இருந்து மாயமான வாலிபர் வைகை ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

மதுரை, ஜூன்
மதுரை கீழசந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குரு (வயது 36). கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி பாண்டிசெல்வி தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதி வைகை ஆற்றில் ஒரு வாலிபர் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் அந்த உடலை மீட்டு விசாரித்தனர். இதில் அவர் வீட்டில் இருந்து மாயமான குரு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. குடும்பத்தகராறு காரணமாக குருவின் மனைவி அவரை விட்டு சில தினங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். அதன் காரணமாக மன வருத்தத்தில் அவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story