ஈரோட்டில் 33 சதவீத பணியாளர்களுடன் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்க தொடங்கின


ஈரோட்டில் 33 சதவீத பணியாளர்களுடன் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்க தொடங்கின
x
தினத்தந்தி 29 Jun 2021 2:31 AM IST (Updated: 29 Jun 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 33 சதவீத பணியாளர்களுடன் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்க தொடங்கின.

ஈரோடு
ஈரோட்டில் 33 சதவீத பணியாளர்களுடன் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்க தொடங்கின.
50 ஆயிரம் விசைத்தறிகள்
ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, சோலார், அசோகபுரம், லக்காபுரம் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிகள் மூலம் தினசரி 24 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. 
இந்த துணிகள் மராட்டியம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஈரோட்டில் விசைத்தறி பணியில் நேரடியாக சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். தினசரி ரூ.7 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டது. வடமாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்தபோது சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் குடோன்களில் தேங்கின.
33 சதவீதம் பணியாளர்கள்
தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டன. தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு அறிவிப்பின்படி ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் விசைத்தறி கூடங்களை நேற்று திறந்தனர்.
மேலும், 33 சதவீத பணியாளர்களுடன் விசைத்தறிகளை இயக்க தொடங்கினார்கள். சுமார் 7 வாரங்களுக்கு பிறகு நேற்று 50 ஆயிரம் விசைத்தறிகளும் இயங்க தொடங்கி இருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story