திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி பெண்ணிடம் மனு வாங்கி சென்ற மு.க.ஸ்டாலின்


திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி பெண்ணிடம் மனு வாங்கி சென்ற மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 Jun 2021 9:17 PM IST (Updated: 29 Jun 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி பெண்ணிடம் மனு வாங்கி சென்ற மு.க.ஸ்டாலின்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் த.வெங்கடலட்சுமி. நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தற்காலிக கணினி இயக்குபவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை பணிநிரந்தரம் செய்ய கோரி பல முறை பேரூராட்சிகள் இயக்குனர் அலுவலகத்திலும், உள்ளாட்சி துறை நிர்வாகத்திற்கும் மனு அனுப்பியிருந்தார்.

இதுவரை அவர் பணிநிரந்தம் செய்யப்படவில்லை. இந்நிலையில் மாமல்லபுரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இ.சி.ஆர். சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சாலையோரத்தில் கையில் மனுவுடன் வெங்கடலட்சுமி நின்று கொண்டிருந்தார். இதைகவனித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி அப்பெண்ணிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டு அவரிடம் குறைகளை கேட்டறிந்தார். அதற்கு மு.க.ஸ்டாலின் இந்த மனு குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து ஆவண செய்வதாக அவரிடம் உறுதி அளித்தார்.

Next Story