மதுரையில் ஒரே நாளில் 12 பேரின் உயிரை குடித்த கொரோனா


மதுரையில் ஒரே நாளில் 12 பேரின்  உயிரை குடித்த கொரோனா
x
தினத்தந்தி 29 Jun 2021 9:48 PM IST (Updated: 29 Jun 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனா பரவல் குறைந்தாலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 9 பேர் இறந்த நிலையில் நேற்று 12 பேர் இறந்ததாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

மதுரை,ஜூன்
மதுரையில் கொரோனா பரவல் குறைந்தாலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 9 பேர் இறந்த நிலையில் நேற்று 12 பேர் இறந்ததாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
புதிதாக 70 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மதுரையிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து நேற்று 70 பேருக்கு மட்டுமே நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 
சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 49 பேர் நகர் பகுதியை  சேர்ந்தவர்கள். இதன் மூலம் இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது.
12 பேர் உயிரிழப்பு
மேலும் நேற்று ஒரே நாளில் 58 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இதில் 38 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள போதிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 9 பேர் பலியானதாக தெரிவித்த சுகாதார துறையினர், நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் மதுரையில் நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,105 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்கள்
மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி நேற்று மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 642 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள்.
நோய் பாதிப்பு குறைந்து விட்டதாக அலட்சியமாக இருக்காமல் நோய் தடுப்பு விதிமுறைகளை அனைத்து தரப்பினரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story