ஈரோடு மாவட்டத்தில் 493 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேர் பலியானார்கள்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேர் பலியானார்கள்.
கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்று பரவலில் 2 அலைகளின் போதும் பரபரப்பை ஏற்படுத்திய மாவட்டங்களில் முக்கிய இடம் பிடித்து வருவது ஈரோடு மாவட்டம். முதல் அலையில் தொடக்கத்திலேயே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட்ட மாவட்டமாகவும் ஈரோடு இருந்தது.
2-வது அலையில் தொடக்கத்தில் ஈரோட்டில் கொரோனா பரவல் வேகம் குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்து பரபரப்பு எகிற வைத்து தமிழகத்தில் 2-வது அதிக பரவல் உள்ள மாவட்டமாக நிலைநிறுத்தியது.
493 பேர் பாதிப்பு
தற்போது தமிழ்நாடு அளவில் கொரோனா தொற்று குறைந்தாலும், ஈரோடு மாவட்டம் சராசரியாக மிகக்குறைந்த வேகத்திலேயே கொரோனாவில் இருந்து விடுபட்டு வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக தினசரி கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,000-க்கும் மேல் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் இந்த எண்ணிக்கை 1,000-க்கும் கீழ் குறைந்தது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் கொரோனா கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 506 ஆக இருந்தது. அது நேற்று 493 ஆக குறைந்து உள்ளது.
3 பேர் பலி
இதுபோல் நேற்று முன்தினம் 2 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருந்தனர். நேற்று 3 பேர் இறந்து உள்ளனர். அதாவது சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஈரோட்டை சேர்ந்த 60 வயது ஆண், வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஈரோட்டை சேர்ந்த 46 வயது ஆண், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த 51 வயது ஆண் என 3 பேர் இறந்தனர்.
வேண்டுகோள்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 89 ஆயிரத்து 212 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 84 ஆயிரத்து 461 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். 588 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். 4 ஆயிரத்து 163 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்து உள்ள அனைத்து வழிமுறைகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story