விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பஜாரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பஜாரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடம்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈசன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் ரமேஷ், தொகுதி செயலாளர் யோகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி எழிலரசன், பேரம்பாக்கம் ஜி.ஆனந்தன், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், அருண் கவுதம், செல்வம், தமிழ்வளவன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் திரளான விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தாருக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 உதவித் தொகை வழங்க வேண்டும், மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசியை தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் சசிதரன் நன்றி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்டக்குழு சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை வட்டகுழு செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story