முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம்
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகம்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருவாரூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் நேற்று 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் வகுப்புகளுக்கான கால அட்டவணை ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி, பட்டதாரி ஆசிரியர் வீரபாண்டியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் கீழப்பாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வகுப்புகளின் கால அட்டவணை வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story