கந்து வட்டி சட்டத்தில் 4 பேர் மீது வழக்கு
கந்து வட்டி சட்டத்தில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை, ஜூலை.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 39). இவர் தொழில் செய்வதற்காக மதுரை லட்சுமிபுரத்தை சேர்ந்த பாண்டித்துரை, ஆலங்குளம் பால்துரை மோகன், மருதுபாண்டியன், ஜெய்ஹிந்த்புரம் மணி ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் 41 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அந்த பணத்தை வட்டியுடன் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதாக அவனியாபுரம் போலீசில் ஸ்ரீதர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கந்து வட்டி சட்டத்தின் கீழ் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story