68 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 68 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகினர்.
மதுரை,ஜூலை
மதுரையில் நேற்று 68 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று புதிதாக 56 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 535 ஆக உள்ளது. கடந்த 2 நாட்களாக கொரோனா பலி அதிகமாக இருந்த நிலையில் நேற்று உயிர்பலி சற்று குறைந்துள்ளது.
அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 87, 82 வயது முதியவர்கள், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 73 வயது முதியவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,108 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 636 ஆக இருக்கிறது. இவர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story