“நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் தாஜ்மகாலாக இருந்தாலும் இடிக்கப்படும்” - ஐகோர்ட்டு அதிரடி


“நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் தாஜ்மகாலாக இருந்தாலும் இடிக்கப்படும்” - ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 1 July 2021 11:40 AM IST (Updated: 1 July 2021 11:43 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும் இடிக்கப்படும் என ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்

சென்னை,

நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரெயில்வே நடைபாதையை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ரெயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நடைபாதை கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வர தயாராக இருப்பதாக ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நெடுஞ்சாலை, ரெயில்வே ஆகியவற்றின் வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது தான் என்றாலும் அவர் இயற்கை வளங்களையும், நீர்நிலைகளையும் ஒட்டுமொத்தமாக பாதிக்கக் கூடாது என கருத்து தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையைச் சார்ந்தது, நடைபாதை கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு மற்றும் தென்னக ரெயில்வே 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story