திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை


திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
x
தினத்தந்தி 1 July 2021 9:43 AM GMT (Updated: 1 July 2021 9:43 AM GMT)

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், வீடு வீடாகச்சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. மாநகராட்சி கழிப்பிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறையை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அரசு சட்டவிதிகள்படி அரசு அலுவலகங்களிலும், தனியார் அலுவலகங்ளிலும் மாற்றுத்திறனாளிகள் செல்ல ஏதுவாக பாதை அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதை ஏற்று முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story