புதிதாக 94 பேருக்கு கொரோனா உறுதி

மதுரையில் புதிதாக 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை, ஜூலை
மதுரையில் நேற்று புதிதாக 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று புதிதாக 48 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 583 ஆக உள்ளது. இந்த நிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1109 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 685 ஆக உள்ளது.
Related Tags :
Next Story






