சத்தி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை புலி அடித்து கொன்றது; கிராமமக்கள் பீதி


சத்தி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை புலி அடித்து கொன்றது; கிராமமக்கள் பீதி
x
தினத்தந்தி 2 July 2021 2:58 AM IST (Updated: 2 July 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

சத்தி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை புலி அடித்து கொன்றது.

டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கடம்பூர் மலைப்பகுதியை அடுத்த காடகநல்லி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பொன்னான் (வயது 45). இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து 15 மாடுகள் வளர்த்து வருகிறார். இவற்றை  நேற்று முன்தினம் காலை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டார். இதில் 12 மாடுகள் மட்டும் மாலையில் வீடு திரும்பின.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மாடுகள் வீட்டுக்கு வந்தன. ஒரு பசு மாடு மட்டும் வரவில்லை. இதனால் பொன்னான் அந்த மாட்டை தேடிச்சென்றார். அப்போது பசு மாடு வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. ஏதோ விலங்கு அடித்து கொன்றது தெரியவந்தது.
உடனே இதுபற்றி அவர் கடம்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது மாட்டின் உடல் அருகே புலியின் கால்தடம் பதிவாகியிருந்தது. எனவே. வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி அடித்து கொன்றது தெரிய வந்தது. பின்னர் அந்த பகுதியிலேயே குழி தோண்டி மாட்டின் உடல் புதைக்கப்பட்டது. 
புலி மாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் மலைக்கிராம மக்களை பீதியடைய செய்துள்ளது.

Next Story