ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 411 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர்.
411 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவி காணப்படுகிறது. குறிப்பாக நகர்புறங்களைவிட கிராமங்களில் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது தொற்று குறைந்து கொண்டே வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் 420 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் நேற்றும் ஒரே நாளில் புதிதாக 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தமிழகத்திலேயே அதிக தொற்று பரவலில் தொடர்ந்து 2-வது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது. இதுவரை மொத்தம் 89 ஆயிரத்து 934 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் 85 ஆயிரத்து 260 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 310 பேர் குணமடைந்தனர். தற்போது 4 ஆயிரத்து 80 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
5 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண் கடந்த மாதம் 6-ந் தேதியும், 45 வயது பெண் 28-ந் தேதியும், 52 வயது பெண் 29-ந் தேதியும், 46 வயது ஆண், 59 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினமும் உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 594 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story