ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.8 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் காட்டுப்பகுதியில் ரூ.8 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொடிபேலா என்னும் இடத்தில் செம்மரக்கட்டைகளை வெட்டிய வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ், ராமராஜ், பிரபு விஜயகுமார், சம்பத், அப்புராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர மாநில போலீசார் நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் காட்டுப்பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உதவியுடன் சோதனை செய்தனர். அங்கு 2 வாகனங்களில் 353 செம்மர கட்டைகள் அடுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் 8 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ஆந்திராவுக்கு எடுத்து சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story