கரசங்கால் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் கலெக்டர் ஆய்வு
கரசங்கால் ஊராட்சியில் அமைந்திருக்கும் நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டு அங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த உரம் தயாரிக்கும் கூடத்தில் பழக்கழிவு, காய்கறி கழிவு உணவு கழிவுகளை எந்திரம் மூலம் அரைத்து தொட்டிகளில் நிரப்பி இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இந்த உரம் தயாரிக்கும் கூடத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஜெயசுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், சீனிவாசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், படப்பை ஊராட்சி செயலர் முகமது ஆரிப் ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து கரசங்கால் ஊராட்சியில் அமைந்திருக்கும் நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டு அங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் செயற்பொறியாளர் அருண், மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர். அப்போது கரசங்கால் பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் தங்களுக்கு குடிநீர் வசதி், மின்சார வசதி செய்து தரப்பட வில்லை. எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த கலீல் ரஹ்மான் என்பவர் கலெக்டரை சந்தித்து என்னுடைய 3 பிள்ளைகளில் ஒரு மகன், ஒரு மகள் நடக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வசிப்பதற்கு வீடு இல்லாமல் உள்ளேன். உதவி செயயவேண்டும் என்று மனு அளித்தார்.
Related Tags :
Next Story