'யூ-டியூப்'பில் ஆபாச பேச்சு: பப்ஜி மதன் ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு
'யூ-டியூப்'பில் ஆபாச பேச்சு: பப்ஜி மதன் ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு விசாரணை தள்ளிவைப்பு.
சென்னை,
‘பப்ஜி' விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன் என்ற மதன்குமார். பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர், சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கூறி அவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை செசன்சு கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடவில்லை. எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. என்னை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து விட்டனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து போலீசாரிடம் இருந்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு வக்கீல் கூறினார். இதைத்தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை 5-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Tags :
Next Story