பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமண ஏற்பாடு பிடிக்காததால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே ராைமயன்பட்டியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் கீர்த்தனா (வயது 26). என்ஜினீயரிங் முடித்துள்ளார். இவர் மேற்படிப்பு படிக்க விரும்பியதாகவும், ஆனால் அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கீர்த்தனா வீட்டின் மாடி அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story