மூதாட்டி தீக்குளிப்பு


மூதாட்டி தீக்குளிப்பு
x
தினத்தந்தி 2 July 2021 10:51 PM IST (Updated: 2 July 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே மூதாட்டி தீக்குளித்தார்.

திருப்பரங்குன்றம், ஜூலை
திருப்பரங்குன்றத்தை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் காவேரி (வயது 65). இவர் நேற்று திடீரென்று அவரது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகிய அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவர் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story