மரத்தில் வேன் மோதி வியாபாரி சாவு
பூவந்தி அருகே சரக்கு வேன் மரத்தில் மோதியது. இதில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
திருப்புவனம்,
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் அஷ்ரப் அலி (வயது 46). இவரது தம்பி ரஹ்மத்துல்லா (36). காய்கறி வியாபாரிகள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வாங்கி கொண்டு தொண்டிக்கு சரக்கு வேனில் திரும்பி சென்றனர். சரக்கு வேனை தொண்டியை சேர்ந்த மணீஸ்குமார் என்பவர் ஓட்டினார்.
சரக்கு வேன் பூவந்தியிலுள்ள தனியார் கல்லூரியின் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் இடது புறம் இருந்த புளியமரத்தில் மோதி உள்ளது. இதில் ரஹ்மத்துல்லா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இச்சம்பவம் குறித்து அஷ்ரப் அலி பூவந்தி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு சரக்கு வேன் டிரைவர் மணீஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பூவந்தி அருகே சரக்கு வேன் மரத்தில் மோதியது. இதில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
காய்கறி வியாபாரிகள்
இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி வாங்கி கொண்டு தொண்டிக்கு சரக்கு வேனில் திரும்பி சென்றனர். சரக்கு வேனை தொண்டியை சேர்ந்த மணீஸ்குமார் என்பவர் ஓட்டினார்.
சரக்கு வேனில் டிரைவர் சீட்டுக்கு இடதுபுறம் ரஹ்மத்துல்லா உட்கார்ந்து உள்ளார். அஷ்ரப் அலி வேறு வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தார்.
மரத்தில் வேன் மோதியது
இச்சம்பவம் குறித்து அஷ்ரப் அலி பூவந்தி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு சரக்கு வேன் டிரைவர் மணீஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story