காரில் ஆயுதங்களுடன் வந்த 4 வாலிபர்கள் சிக்கினர்
பழிக்கு பழியாக கொலை செய்யகாரில் ஆயுதங்களுடன் வந்த 4 வாலிபர்கள் சிக்கினர்
மதுரை,ஜூலை.
மதுரை திருப்பாலை இன்ஸ்பெக்டர் எஸ்தர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் காரில் சென்ற 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் பில்லூரை சேர்ந்த ராமன் (வயது 23), புதூர் காந்திபுரம் பிரகாஷ் (20), ஜவகர்புரம் ஆதிமாரியம்மன் கோவில் தெரு கணேசன் (20), காந்திபுரம் பிள்ளையார் கோவில் தெரு சதீஷ்குமார் (23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த காரை சோதனை செய்த போது அதில் 5 பெரிய கத்திகள், 4 செல்போன்கள், 16 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 மிளகாய் பொடி பாக்கெட்டுகள் இருந்தன. புதூரை சேர்ந்த சரவணன் என்பவரது சகோதரர் தினேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புறா பாண்டி என்பவரை பழிக்குப் பழி தீர்ப்பதற்காக சரவணன் 4 கூட்டாளிகளுடன் ஆடம்பர காரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். சரவணனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story