கணவனுடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு


கணவனுடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 3 July 2021 12:51 AM IST (Updated: 3 July 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

சமயநல்லூர் அருகே பட்டப்பகலில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த கொள்ளையர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.

வாடிப்பட்டி, ஜூலை
சமயநல்லூர் அருகே துவரிமான் கீழத்தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் தீர்த்தம் (வயது 43). இவரது மனைவி சிவசங்கரி (32). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் மதியம் மோட்டார்சைக்கிளில் வாடிப்பட்டியிலிருந்து துவரிமானுக்கு சென்று கொண்டிருந்தனர். சமயநல்லூர் ெரயில்வே மேம்பாலத்தில் வந்த போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிவசங்கரி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே சிவசங்கரி தாலிச்சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அதனால் ஆத்திரத்தில் சங்கிலியை அறுத்தனர். இந்த போராட்டத்தில் சிவசங்கரி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடவே மர்ம நபர்கள் தாலிச்சங்கிலியுடன் வேகமாக தப்பிச் சென்று விட்டனர். சிவசங்கரி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story