மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி + "||" + The old woman was struck by electricity and killed

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியானார்.
அலங்காநல்லூர்,ஜூலை
மதுரை பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 65). இவர் நேற்று காலை தென்னை மட்டைகளை சேகரிக்க சென்றுள்ளார். நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால் மரம் ஒடிந்து விழுந்து அந்த பகுதியில் உள்ள மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற பஞ்சவர்ணம் மின் கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.