கஞ்சா விற்ற தாய்-மகன் உள்பட 3 பேர் கைது


கஞ்சா விற்ற தாய்-மகன் உள்பட 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற தாய்-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,ஜூலை
மதுரை கரிமேடு போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்ற போது கஞ்சா விற்ற 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கரிமேட்டை சேர்ந்த அழகம்மாள் (வயது 51), அவரது மகன் பூபதி (24) மற்றும் தத்தனேரி உதயகுமார் (34) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1¼ கிலோ கஞ்சா மற்றும் 1,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Next Story