காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்


காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 1:04 AM IST (Updated: 3 July 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

மேலூர்,ஜூலை
மேலூர் யூனியன் ஊன்கால்புளியங்குளத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் காலிக்குடங்களுடன் மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக கூறி கோஷமிட்டனர். அவர்களிடம்  வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story