கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
குணம் அடைந்தவர்கள்
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 55 ஆயிரத்து 101 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 2,948 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 49 ஆயிரத்து 997 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 14,337 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 60 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 871 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 593 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
மைசூருவில் 457 பேர், தட்சிண கன்னடவில் 302 பேர், ஹாசனில் 271 பேர், குடகில் 170 பேர், சிவமொக்காவில் 145 பேர், துமகூருவில் 131 பேர், மண்டியாவில் 109 பேர், சிக்கமகளூருவில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 21 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 11 பேரும், தட்சிண கன்னடவில் 13 பேரும், பல்லாரியில் 10 பேரும், மண்டியாவில் 7 பேரும், மைசூருவில் 5 பேரும் என மொத்தம் 88 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழும், வைரஸ் தொற்று உயிரிழப்புகள் 100-க்கு கீழும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story