விடிய விடிய தூறல்: ஈரோட்டில் 24 மி.மீட்டர் மழை பதிவானது; கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் கொட்டியது
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை அளவு ஈரோட்டில் 24 மி.மீட்டராக பதிவாகியது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழை கொட்டியது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை அளவு ஈரோட்டில் 24 மி.மீட்டராக பதிவாகியது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழை கொட்டியது.
விடிய விடிய மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று பலத்த மழையாகவே இது இருந்தது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய தூறலாகவே இருந்தது.
இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீர் ஓடைகள், சாக்கடை ஓடைகளில் தண்ணீர் ஆறு போல ஓடியது. நேற்று அதிகாலை வரை மழைத்தூறல் இருந்தது.
24 மி.மீட்டர்
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 24 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பிச்சைக்காரன் பள்ளம், பெரும்பள்ளம் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சூரம்பட்டி வலசு அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி அருவியாக கொட்டியது.
அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீட்டர் மழை கொட்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி -65
பவானிசாகர் -62.8
கோபி -29
ஈரோடு -24
கொடுமுடி -22.4
அம்மாபேட்டை -18.8
நம்பியூர் -10
மொடக்குறிச்சி -8
குண்டேரிபள்ளம் - 7
சென்னிமலை -3
பவானி -2.8
தாளவாடி -1
நேற்று மாலையும் ஈரோட்டில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
Related Tags :
Next Story