சத்தியமங்கலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ஆயிரம் லிட்டர் பால் வீணானது


சத்தியமங்கலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து  ஆயிரம் லிட்டர் பால் வீணானது
x
தினத்தந்தி 3 July 2021 2:54 AM IST (Updated: 3 July 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ஆயிரம் லிட்டர் பால் வீணானது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ஆயிரம் லிட்டர் பால் வீணானது.
டேங்கர் லாரி கவிழ்ந்தது
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் தினசரி பால் கொள்முதல் செய்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள  ஆலைக்கு கொண்டு செல்கிறது. அதன்படி நேற்று மதியம் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து டேங்கர் லாரி ஒன்று பால் ஏற்றிக்கொண்டு பாலக்கோடுக்கு சென்று கொண்டிருந்தது.
ராமபையலூர் என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக லாரி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் லேசான காயம் அடைந்தார்.
பால் வீணானது
விபத்தில் லாரியின் டேங்கர் உடைந்து அதிலிருந்து பால்  கொட்ட தொடங்கியது. இந்த பால் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் ஆறு போல் ஓடியது. இதைத்தொடர்ந்து டிரைவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தான் வைத்திருந்த பால் நிரப்பும் கேன்கள் மூலம் டேங்கரில் இருந்து கொட்டிய பாலை பிடித்தார்.
ஆனால் சுமார் ஆயிரம் லிட்டர் பால் வீணானது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story