ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் 33 காசு உயர்ந்தது; ரூ.101-ஐ நெருங்குகிறது
ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் 33 காசு உயர்ந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கடந்த வாரம் ரூ.100-ஐ கடந்தது. தொடர்ந்து விலை ஏற்றத்துடன் சதம் அடித்த பெட்ரோல் விலை ஒரே நாளில் 33 காசுகள் உயர்ந்து உள்ளது.
நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 37 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 33 காசுகள் அதிகரித்தது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 70 காசாக உயர்ந்தது. இந்த நிலையில் விலை உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் ஓரிரு நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101-ஐ எட்டி விடும். நேற்று டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 31 காசுக்கு விற்பனையானது.
Related Tags :
Next Story