மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்ஒரே நாளில் 395 பேருக்கு கொரோனா;3 பேர் பலி + "||" + corona virus

ஈரோடு மாவட்டத்தில்ஒரே நாளில் 395 பேருக்கு கொரோனா;3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில்ஒரே நாளில் 395 பேருக்கு கொரோனா;3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
395 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை ஈரோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற  மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் தொற்று பரவலில் தொடர்ந்து மாநில அளவில் 2-வது இடத்திலேயே உள்ளது. மெதுவாக தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், நேற்று புதிய பாதிப்பு 400-ஐ விட குறைந்துள்ளது.
ஒரே      நாளில்  புதிதாக 395 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்து 183 ஆக உயர்ந்தது. இதில் 85 ஆயிரத்து 463 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 203 பேர் குணமடைந்தனர். தற்போது 4 ஆயிரத்து 123 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
3 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 40 வயது ஆண், 80 வயது முதியவர் ஆகியோர் கடந்த 30-ந் தேதியும், 67 வயது முதியவர் நேற்றும் உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 597 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
3. புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ் தொற்றுக்கு பலியாகினா்.
4. இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.