உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் காஜா பேக் (வயது 48). இவர் உத்திரமேரூர் பஜார் வீதியில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று காலை 11 மணி அளவில் காஜா பேக் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த 9 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருப்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் காஜா பேக் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உத்திரமேரூர் பஜார் வீதி அம்பேத்கர் சிலை அருகே உள்ள டீக்கடையின் அருகே சென்று நின்றது. கொள்ளையர்கள் கொள்ளை அடித்துவிட்டு பஜார் வீதியில் வந்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story