மாவட்ட செய்திகள்

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை + "||" + Woman commits suicide by jumping into well

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே எழுமலை தேவர்சிலை எதிரே வசிப்பவர் கண்ணன். இவர் மனைவி வீரலெட்சுமி (வயது 36). வீரலெட்சுமிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனையில் இருந்த வீரலெட்சுமியை திடீரென காணவில்லை. இதனை தொடர்ந்து உறவினர்கள் தேடி பார்த்த போது அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த எழுமலை போலீசார் மற்றும் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள் கிணற்றில் இருந்து வீரலட்சுமி உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடல் எடை அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
காரைக்குடியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை
வெள்ளியணை அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
குலகேரன்பட்டினம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. 5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
5. காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.