மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
மதுரை
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மதுரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மேலப்பொன்னகரம் பகுதி குழு சார்பில் தலையில் முக்காடு போட்டு பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது. பகுதி குழு தலைவர் ஜென்னி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சசிகலா, மாவட்ட துணை தலைவர் ஜெயராணி, மாவட்டக்குழு உறுப்பினர் ப்ரீதி, பகுதி குழு உறுப்பினர்கள் ஜெயா, கனகவள்ளி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து மலர்தூவி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். விலை உயர்வை கண்டிக்கும் வகையில், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்வது போன்றும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story