கர்நாடகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு கீழ் சரிவு


கர்நாடகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு கீழ் சரிவு
x
தினத்தந்தி 3 July 2021 8:37 PM GMT (Updated: 3 July 2021 8:37 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது.

பெங்களூரு:

  கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2,082 பேருக்கு பாதிப்பு

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 2 ஆயிரத்து 82 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 52 ஆயிரத்து 79 ஆக உயர்ந்து உள்ளது.

  வைரஸ் தொற்றுக்கு மேலும் 86 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 35 ஆயிரத்து 308 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 7,751 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 27 லட்சத்து 68 ஆயிரத்து 632 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 48 ஆயிரத்து 116 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். பெங்களூரு நகரில் புதிதாக 481 பேர் பாதிக்கப்பட்டனர்.

7 மாவட்டங்களில்....

  மைசூருவில் 227 பேரும், தட்சிண கன்னடாவில் 214 பேரும், ஹாசனில் 102 பேரும், சிவமொக்காவில் 108 பேரும், உடுப்பியில் 102 பேரும் பாதிக்கப்பட்டனர். 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 200-க்கும் கீழ் பதிவாகி உள்ளது.

  தட்சிண கன்னடாவில் 13 பேர், பெங்களூரு நகரில் 10 பேர், பல்லாரியில் 9 பேர், பெலகாவி, மைசூருவில் தலா 7 பேர், தார்வாரில் 6 பேர், ஹாசனில் 4 பேர், பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், சிவமொக்கா, உத்தர கன்னடாவில் தலா 3 பேர், ராமநகரில் 2 பேர், சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, தாவணகெரே, கதக், ஹாவேரி, கோலார், கொப்பல், துமகூரு, உடுப்பி, விஜயாப்புராவில் தலா ஒருவர் என 86 பேர் இறந்தனர். 7 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story