காஞ்சீபுரம் சரகத்தில் 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் - டி.ஐ.ஜி. உத்தரவு


காஞ்சீபுரம் சரகத்தில் 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் - டி.ஐ.ஜி. உத்தரவு
x
தினத்தந்தி 4 July 2021 9:28 AM IST (Updated: 4 July 2021 9:28 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் சரகத்தில் 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம்.சத்தியபிரியா பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் கும்மிடிப்பூண்டி மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்பு பட்டியலில் இருந்த விஜயலட்சுமி, ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், ஒரகடம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், மறைமலை நகர் போலீஸ் நிலையத்திற்கும், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் கூடுவாஞ்சேரிக்கும்,

கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் ஓட்டேரிக்கும், திருவள்ளூர் மாவட்டம் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசன் அச்சரப்பாக்கத்திற்கும், அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் படாளத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

படாளம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் கும்மிடிப்பூண்டிக்கும், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் திருவள்ளூர் தாலுகாவுக்கும், திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் சோழவரத்திற்கும், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆர்.கே பேட்டைக்கும், ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் ஒரகடத்திற்கும், திருவள்ளூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி செங்கல்பட்டு மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், செங்கல்பட்டு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான அருள்ராஜாமணி திருவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், மணவாளநகர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் கல்பாக்கம் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story