அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
பூதப்பாண்டி அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 4 பவுன் நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 4 பவுன் நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
டிரைவர்
பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி தங்ககுமாரி (வயது 70). முருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், தங்ககுமாரி வீட்டை பூட்டி விட்டு அவரை சிகிச்சைக்காக தடிக்காரன்கோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர்களின் அறிவுரையின் பேரில் முருகன் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் தங்ககுமாரியும் தங்கியிருந்தார்.
நகை-பணம் கொள்ளை
இந்தநிலையில் நேற்று காலை தங்ககுமாரியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் கண்டனர். இதுபற்றி தங்ககுமாரியிடம் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, படுக்கை அறையில் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.16 ஆயிரம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து தங்ககுமாரி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story