மதுரையில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
மதுரையில் மேலும் 75 பேருக்கு கொரோனா
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 610 ஆக உள்ளது. இதுபோல் நேற்று புதிதாக 81 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 765 ஆக உள்ளது. இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண் உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1120 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 725 ஆக உள்ளது. இதுபோல், 120 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story