ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை


ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 5 July 2021 12:40 AM IST (Updated: 5 July 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சோழவந்தான்
சோழவந்தான் அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்றனர்
சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 60). இவர் ெரயில்வே போலீசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு அகிலா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணனும், அகிலாவும் இங்கு வசித்து வந்தனர். மகன் மற்றும் மகள் சென்னையில் உள்ளனர். 
இவர்களை பார்ப்பதற்கு பாலகிருஷ்ணன், அகிலா கடந்த 2-ந் தேதி சென்னை சென்றனர். இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் பாலகிருஷ்ணனின் ஊரில் வந்து விட்டாரா என பார்ப்பதற்காக நேற்று காலை உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.
20 பவுன்
மேலும், இதுகுறித்து பாலகிருஷ்ணன் மற்றும்  சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். 
வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் பாலகிருஷ்ணன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகையை திருடி சென்றதும், துணிக்கு அடியில் வைத்திருந்த ரூ.73 ஆயிரம் பணம் கொள்ளையர்கள் கையில் சிக்காமல் தப்பியதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story